ஆடுகளத்தின் மாற்றம் மற்றும் அதனால் கிடைக்கும் வாய்ப்புக்கள் குறித்து தில்ருவன் கருத்து!

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிறிதொரு போதும் காணாத வகையில் ஆடுகளத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அது மிகவும் வேகங் குறைந்த வகையில் பந்துகளை ஈடு செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் நேற்று(06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது சுழற் பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா தெரிவித்துள்ளார்.


‘‘நாம் ஏனைய நாட்களில் காணும் ஆடுகளம் அல்ல இது.. வேறு விதமானது ஒன்றாகும்.. ஏனென்றால் நாம் எண்ணியதை விடவும் மாற்றமாகவே ஆடுகளம் அமைந்திருந்தது. நான் நினைக்கிறேன் இரண்டு நாட்கள் மழையுடன் கூடிய காலநிலை என்பதால் குறித்த மாற்றம் நிகழ்ந்திருக்கும். முதல் 35 ஓவர்களுக்கும் ஆடுகள பிட்ச் ஆனது மிகவும் மந்தமாகவே இருந்தது..’

‘‘எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு பிட்சில் பாரிய மற்றம் ஏற்படும் என நம்பிக்கையில்லை.. ஆதலால் இந்த பிட்ச் எமக்கு நல்லதொரு துடுப்பட்டத்தினை வழங்கும் என நம்புகிறோம். இங்கிலாந்து வீரர்கள் முதலில் இருந்தே கூடிய ஓட்டங்களை பெரும் அணியாகவே நாம் எண்ணியிருந்தோம். என்றாலும் நாணய சுழற்சியில் வென்று நாம் முதலில் துடுப்பெடுத்தாடினாலும் இதுவே தான் நடக்கும்.’’ යஎன தில்ருவன் தெரிவித்திருந்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.