ஸ்நாக்ஸ் பிரெட் – உருளைக்கிழங்கு வடை!

மாலையில் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுக்கலாம்.


தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் – 10
வறுத்த ரவை – அரை கப்
அரிசி மா – இரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது
உருளைக் கிழங்கு – 2

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் வறுத்த ரவை, அரிசி மா, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

சூப்பரான பிரெட் – உருளைக்கிழங்கு வடை ரெடி.
Powered by Blogger.