ரஞ்சி டிராபி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு 163/2

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.



டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அகபசாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.

சந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
தமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.

இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.