சந்திமாலின் துடுப்பாட்டம் நிச்சயமற்ற நிலையில்!

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் நேற்று(06) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது கட்டத்தில் உபாதைக்கு உள்ளக்கிய தலைவர் தினேஷ் சந்திமால் இன்றைய(07) தினம் விளையாடுவது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சின் போது, களத்தடுப்பில் இருந்த சந்திமாலின் அடி வயிற்றிலும், பாதத்திற்கு மேலுள்ள பகுதியிலும் இடம்பெற்ற உபாதை நிலை காரணமாகவே நேற்று(06) அவர் தற்காலிகமாக மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

எவ்வாறாயினும், உபாதை குறித்து அவர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது நிச்சயமற்றது என தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  

No comments

Powered by Blogger.