தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 64வது அகவை யாழ் பல்கலைக்கழகத்தில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று 26 (திங்கட்கிழமை) கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டுள்ளது.


மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது இன்று 26 பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் பிறந்த நாள் கேக் அமைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை தலைவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்கு பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.