தேசியத் தலைவர் அகவையில் கிளிநொச்சியில் பசுமை பூங்காவனமாம்!

கிளிநொச்சி, டிப்போ சந்திப் பகுதியில் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பசுமைப் பூங்கா புனித நாட்களை அடையாளப்படுத்தும் வகையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு கோடி ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பின்னர் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உள்ளக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் முற்பகுதியில் லெப் கேணல் சந்திரன் அவர்களின் ஞாபகர்த்த சந்திரன் பூங்கா அமைந்திருந்தது அந்த இடம் இன்று இராணுவ பிரசன்னத்துடன் இராணுவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு தமிழ் மக்களின் அவலத்தை வெற்றிக் களிப்பாக மாற்றி சிங்கள தேசம் மகிழும் நிலையில் காணப்படுகின்றது.
அதனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கரைச்சி பிரதேசசபை பொறுப்பேற்றதன் பின்னர் இத்தகைய துன்பவியல் நிலையில் இருந்து மக்களை மீட்டு மகிழ்ச்சிகரமான ஒரு சூழலை உருவாக்கும் பொருட்டு பசுமை பூங்கா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை