பிரதமராக ரணிலை ஒருபோதும் நியமிக்க மாட்டேன்!


பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை எக்காரணம் கொண்டும் நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக
அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோரை இன்று மாலை சந்தித்து பேசிய போது ஜனாதிபதி இவ்வாறு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Ranil #Maithiripala sirisena
Powered by Blogger.