ஜனாதிபதி அவசரமாக கூத்தமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் நாளைய தினம்
முக்கிய சந்திப்பு ஒன்றினை ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு நாளைய தினம் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என்றும், நாடாளுமன்ற நிலைமை குறித்து கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் குழப்பகரமான நிலைமை இருந்து வருகின்றது. பதவியில் இருந்த பிரதமர் மாற்றப்பட்டார். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இன்று பிரதமர் மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 122பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net   #Rajavarothiam #Sumanthiran #Mavai Senathiraja #Sampanthan #Meetings #Maithripala Sirisena
Powered by Blogger.