வவுனியாவில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மீட்ப்பு

வவுனியாவில் இறந்த நிலையில் பிறந்த குழந்தையை நடு வீட்டில் புதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


ஓமந்தை விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று பொலிசார் கூறினர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையை கைதுசெய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.