விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தினை கையளித்தார்!

முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்த, உத்தியோகபூர்வ கடிதத்தை குறித்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சீ.வி.விக்னேஸ்வரன் இன்று(08) முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியலயத்திற்கு வருகை தந்த விக்னேஸ்வரன் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கடிதத்தினை வழங்கியதுடன் சுமார் ஒரு மணி நேரமாக இருவருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் விக்னேஸ்வரனால் புதிதாக ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற புதிய கட்சியினை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.