இங்கிலாந்து 250 ஓட்டங்களுடன் முன்னிலையில்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளை

வரையில் தமது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது 03 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளது.

அதன்படி, இலங்கை அணியினையும் விட 07 விக்கெட்கள் உடன் 250 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணியானது முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றதோடு, இலங்கை அணியானது முதல் இன்னிங்சில் 203 ஓட்டங்களையே பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை

No comments

Powered by Blogger.