”எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று” – விக்னேஸ்வரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
“மக்கள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தல் வந்திருக்கிறது. எமது கட்சி அதில் கவனம் செலுத்தும்.
அரசியல் நெருக்கடிகளால் தான் இந்தச் சூழல் எழுந்தது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.