ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்
சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ரமாநாயக்க, இந்நாட்டில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.