கருணா மீது கூட்டமைப்பு வீண்பழி சுமத்துகிறது

விநாயகமூர்த்தி முரளிதரன் மீது
வீண்பழி சுமத்தி உண்மையினை மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதாக  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள உள்ளுராட்சி சபைகளின் ஆதரவினை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என அக்கட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
அத்தோடு தமது கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இவ்வாறான வீண்பழி சுமத்தும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான து.நவரெட்னராஜா, தமது கட்சியின் தலைவர் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீண்பழிகளை சுமத்தி உரையாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பினை கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ், ஊடக பேச்சாளர் எஸ்.வசந்தகுமார் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.