யாழ், கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்படும் இராணுவம்

யாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதே போல கிளிநொச்சியின் நகர் பகுதிகளில் வீதியோரங்களில் சிங்கள வாசகங்கள் பொறிக்கப்பட்ட இராணுவத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே போல் கிளிநொச்சி நகர் பகுதியில் A9 பிரதான வீதியின் இரு பக்கமும் கிளை வீதிகளுக்கு இருவர் வீதம் பல நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமிலும் பல நூறு இராணுவத்தினர் அணிவகுத்து நிற்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வடபகுதில் திடீரென இவ்வாறு பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


#Tamilarul.net   #Tamil  #Tamilnews #Tamil #News #Jaffna #Srilanka #kilinochchi

No comments

Powered by Blogger.