முக - காங்கிரஸ் கூட்டணி: நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும்

திமுக-காங்கிரஸ் கூட்டணி தேசத்தின்
ஒற்றுமையை வலுப்படுத்த பாடுபடும்” என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இன்று (டிசம்பர் 9 சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். சோனியாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவர், கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது சுமூகமான மற்றும் உணர்வுப்பூர்வமான சந்திப்பாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். எங்கள் உரையாடல் தொடரவும், எங்கள் கூட்டணியை வலுப்படுத்தவும் நான் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனைப் பகிர்ந்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “உங்களுடைய உணர்வுப்பூர்வமான வார்த்தைகளுக்கு நன்றி. அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் பயனுள்ள விளைவுகளுக்கு வழிவகுக்கும். காங்கிரஸ், திமுக கூட்டணி நாட்டின் ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காகப் பாடுபடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.