சுன்னாகத்தில் காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


யாழ் – சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், மக்கள் குடிமனைக்கு நடுவில் வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மக்கள் உடுவில் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
சுன்னாகம் – புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்போது பொலிஸ் நிலையத்தினை இயக்குபவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு மாற்றுக் காணியை வழங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது.
இதன்படி சுன்னாகம் – புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு அருகில் உள்ள அரச காணி சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த அரச காணி தமக்கு பொருத்தம் இல்லை என்று கூறிவரும் சுன்னாகம் பொலிஸார் சுன்னாகம் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மிக அருகில் உள்ள புலம் பெயர் நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள பொது மகன் ஒருவருடைய 14 பரப்பு காணியை தருமாறு கோரி வந்தனர்.
இதன்படி அக்காணியை சுவீகரித்து பொலிஸாருக்கு ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.