மன்னாரில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள்

மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள்
தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தை நேரு அடிகளார்,அகில இலங்கை தமிழ்  காங்கிரசின் செயலாளர் செல்வராசா கஜன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Powered by Blogger.