இரணைமடு குளத்தின் வரலாறு மறைக்கப்படலாம்

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான நினைவுக்கல் அகற்றப்பட்டமையா னது குளத்தின் வரலாற்றை சிதைப்பதாக அமைந்துள்ளது. எனவே அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீளவும் அந்த இடத்தில் நிறுவுங்கள் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் கேட்டுள்ளார்.



இது தொடர்பாக ஆளுநருக்கு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1954ம் ஆண்டு இரணை மடு குளத்தின் புனர்நிர்மானம் தொடர்பாக நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல் அகற்றப்பட்டுள்ளது.
அந்த நினைவுக்கல்லில் டீ.எஸ்.சேனநாயக்க இவர் இலங்கையின் முதலாவது பிரதமர் மற்றும் இலங்கையின் தே ச பிதா என அழைக்கப்படுகிறார். அதேபோல் டட்லி சேனநாயக்க இவர் விவசாயம் மற்றும் காணி அமைச்சர் அதேபோல் டீ.பி.புலன்குலாம திசாவ இவர் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்,

இவர்களின் பெயர்கள் அந்த கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுக்கல் 1903-1920ம் மற்றும் 1954ம் ஆண்டு வரையான இரணைமடு குளத்தின் வரலாற்றை காட்டியிருக்கின்றது. இதை அகற்றுவதன் ஊடாக இர ணைமடு குளத்தின் வரலாறு மறைக்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் அல்லை, கந்தளாய், கல்லோயா போன்ற நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்களின் குடிப்பரம்பலை மாற்றிய மைத்தமை சம்மந்தமாக தமிழ் மக்களுக்கு பாரிய கவலை உள்ளது.

ஆனால் அவர்கள் இரணைமடு குளத்தின் புனர்நிர்மானத்தை மேற்கொண்டதால் அவர்கள் கௌரவிக்கப்படுவ தை அது தடுத்துவிடாது. எனவே இவர்களது நினைவை தொடர்ந்து பேணுவது எமது கடமையாகும். இந்த விடயம் தொடர்பாக தங்கள் மீதும், ஜனாதிபதி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை துரதிஸ்டவசமானது.

குறித்த நினைவுக்கல் அங்கிருந்து அகற்றப்பட்டமையானது தங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம். எனவே அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீளவும் அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

#Tamilarul.net   #Tamil  #Tamilnews #Tamil #News #Jaffna #Srilanka #kilinochchi #Iranamadu #c.v.k.Sivaganam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.