ஐஸ்க்ரீமின் அப்டேட்டை நிறுத்திய கூகுள்

கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து
ஐஸ்க்ரீம் சாண்ட் விச் ஆண்டராய்டு இயங்குதளத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கப் கேக், டோநட், எக்ளெர் இந்த வரிசையில் ஏழாவதாக ஐஸ்க்ரீம் சாண்ட்விச் ஆண்டராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜெல்லிபீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மெல்லோ எனப் பல்வேறு அப்டேட்கள் வந்துவிட்டதால் ஐஸ்க்ரீம் இயங்குதளத்தைப் பயன்படுத்துவோரது எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதன் காரணமாக அந்தக் குறிப்பிட்ட இயங்குதளத்தின் அப்டேட்டை மட்டும் கூகுள் நிறுவனம் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் ப்ளே நிறுவனத்தின் தொழில்நுட்ப மேலாளரான சாம் ஸ்பென்சர் கூறுகையில், “ஆண்டராய்டு ஐஸ்க்ரீம் சாண்ட்விச்சுகு 7 வயது ஆகிறது. தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டராய்டு பயனர்களின் மொத்த எண்ணிக்கையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகச் சென்றுவிட்டது. இதனால் அந்தக் குறிப்பிட்ட இயங்குதளத்துக்கு மட்டும் எதிர்காலத்தில் எந்தவித அப்டேட்களையும் வழங்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம். தற்போது ப்ளே ஸ்டோரில் புழக்கத்தில் இருக்கும் வெர்சன் 14.7.99தான் அந்த இயங்குதளத்தின் கடைசி அப்டேட்” என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்க்ரீம் சாண்ட்விச் இயங்குதளமானது 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான சாம்சங் கேலக்ஸி நெக்ஸஸ் மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கூகுள் நிறுவனம், தீங்கிழைக்கும் வைரஸ் இருப்பதாகக் கூறி அதன் ப்ளே ஸ்டோர் தளத்தில் இருந்து 22 செயலிகளை அதிரடியாக நீக்கியிருந்தது.

No comments

Powered by Blogger.