டுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது

 டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மற்றும் இகல தப்போவ பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று காலை 8.35 மணியளவில் டுபாய் இல் இருந்து FZ 547 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களின் பயணப் பொதியில் இருந்து 100 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 20,000 சிகரட்களும் வேறு வகையான 22 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4,400 சிகரட்டுக்களும் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ள
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.