தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டனர்.அதில் 8 பேர் பின்புறமாக சுடப்பட்டனர்.

17 வயது பெண் ஸ்னோலின் தலையில் சுடப்பட்டு குண்டு வாய் வழியே வெளியேறி உள்ளது.

40 வயது பெண் ஜான்சி அவர் வீட்டருகே வைத்து சுடப்பட்டார். குண்டு அவர் காதுகள் வழியே பாய்ந்துள்ளது.

34 வயது இளைஞர் மணிராஜ் வலது நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்துள்ளது.

69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. எஸ்.எல்.ஆர் துப்பாக்கியிலிருந்து 30 தோட்டாக்களும், .303 ரக துப்பாக்கியிலிருந்து 3 ரவுண்டுகளும், .410 ரக துப்பாக்கியிலிருந்து 12 முறையும் சுடப்பட்டனர்.

இதில் .303, .410 ரக துப்பாக்கிகள் கடைசி வழியாக பயன்படுத்த வேண்டும் என்ற போதிலும் ஸ்டெர்லைட் படுகொலையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இந்திய போலிஸ் விதிகள் இடுப்புக்கு கீழே சுட வேண்டும் என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு தலையிலும் மார்பிலும் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகர உண்மை பரிசோதனையில் வந்துள்ளது.

இதைப்பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க,

மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
காவல் துறை மறுத்துவிட்டது.
வேதாந்தா குழுமமும் மறுத்துவிட்டது.

Veeraa VK
Powered by Blogger.