தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு எதிராக அவதூறு


வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பல தகவல்கள் பெறப்பட்டு வெளியிடப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக அரச திணைக்களங்களில் தகவல்களை கோருவோர் மீது போலி முகநூல்கள் மற்றும் தமது சொந்த முகநூல்களிலும் சிலர் அவதூறு பரப்பி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தும் பிரஜைகளுக்கு உதவிகளை மேற்கொள்ளும் பொண்ணொருவர் மீது அண்மைக்காலங்களில் பலரும் அவதூறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்திருந்ததுடன் குறித்த நபரை சமூகத்திற்கு ஒவ்வாதா ஒருவராகவும் வெளிப்படுத்தி வந்திருந்தமை தொடர்பாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துமாறு மக்களுக்கு தெளிவுபடுத்தல்கள் ஒருபுரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்துவோர் மீது சிலர் குழுவாக இயங்கி அவதூறு மற்றும் அச்சுறுத்தல் விடுகின்றமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆதரவு தர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.