பொதுஜன பெரமுன அங்கத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியுமா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கு, நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிக்க முடியுமா என ஆராயுமாறு ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.
அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாயந்த திசாநாயக்க இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இது தொடர்பாக ஆராயுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு கட்சியிலிருந்து விலகி பிறிதொரு கட்சியில் இணையும் பட்சத்தில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி அவர் தனது ஆசனத்தை இழக்க நேரிடும்.
எனவே, சபாநாயகர் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 50இற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.