அடுத்த சாம்பியன் யார்?

UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் குரூப் சுற்றுகள்
முடிவடைந்துவிட்டன. எட்டு குரூப் அணிகளிலிருந்தும் தலா இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
குரூப் Aவில் இடம்பெற்றிருந்த பொருஷியா டோர்மண்ட் மற்றும் அத்லெடிகோ மேட்ரிட் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. குரூப் Bயில் இருந்து பார்சிலோனா மற்றும் டோட்டனாம் அணிகளும், குரூப் Cயில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் இடம்பெற்றுள்ள PSG மற்றும் சாலா இடம்பெற்றுள்ள லிவர்பூல் அணிகளும் அடுத்த சுற்றுக்குச் சென்றிருக்கின்றன. இருப்பதிலேயே சுலபமான குரூப்பாகச் சொல்லப்பட்ட Dயில் இருந்து போர்டோ மற்றும் ஷால்கே 04 அணிகள் முன்னேறியிருக்கின்றன. இதில் போர்டோ அணி ஒரு தோல்வியைக்கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் Eயில் இருந்து பேயன் முனிச் மற்றும் அஜாக்ஸ் அணிகளும், குரூப் Fயில் இருந்து மான்செஸ்டர் சிட்டி மற்றும் லயான் அணிகளும், குரூப் Gயில் இருந்து ரியல் மேட்ரிட் மற்றும் ரோமா அணிகளும், குரூப் Hயில் இருந்து ஜுவண்டெஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளும் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
வெகு விரைவில் டிரான்ஸ்ஃபர் விண்டோ தொடங்கிவிடும் என்பதால், அடுத்தடுத்த UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இந்த அணிகள் எப்படி செயல்படப் போகின்றன என்பதை வைத்தே அவற்றிலுள்ள வீரர்களின் மார்க்கெட் விலை உயரும்.

No comments

Powered by Blogger.