மரணத்தின் பிடியில் 3 கோடி குழந்தைகள்: ஒரு பகீர் ரிப்போர்ட்
உலகம் முழுதும் சுமார் 3 கோடி குழந்தைகள் மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக யூனிசெஃப் மற்றும் உலக சுகாதாரக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்த உலகளாவிய ஆய்வுக் கூட்டணி அறிக்கை ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.
இக்குழந்தைகள் ஒன்று 10 மாதம் ஆகாமலேயே முன் கூட்டியே பிறந்தவையாக இருக்கின்றன, அல்லது அளவில் மிகச்சிறியதாக உள்ளன அல்லது நோயுடன் பிறந்துள்ளன. இக்குழந்தைகள் உயிர் ஒருமாதம் தாங்க வேண்டுமெனில் மிகவும் சிறப்ப்பு வாய்ந்த சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
யூனிசெஃப் துணை செயல் இயக்குந்ர் கூறும்போது, "இந்தக் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சரியான நேரத்தில் சரியான கவனிப்பும், சரியான இடத்திலும் தேவைப்படுகிறது. லட்சக்கணக்கில் கைக்குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், தாய்மார்கள் தரமான மருத்துவமின்மை, கவனிப்பின்மை, அக்கறையின்மையால் மடிகின்றனர். சரியான மருத்துவம், சரியான நேரத்தில் சிகிச்சை என்பது அவர்களது உரிமை, நம் அனைவரது பொறுப்பும் ஆகும்" என்றார்.
10 மாதம் ஆகாமல் முன் கூட்டியே பிறக்கும் குழந்தைகள் அல்லது குழந்தைப் பிறப்பின் போது மூளைக் காயம் ஏற்பட்டு அவதிப்படும் குழந்தைகள், கடுமையான பாக்டீரியா தொற்று அல்லது மஞ்சள் காமாலை, ஆகியவற்றினால் ஒன்று செயலிழந்து முடங்கி விடுகின்றனர் அல்லது மரணத்தை எதிர்நோக்குகின்றனர் என்கிறது இந்த அறிக்கை.
மேலும், இத்தகைய குழந்தைகளினால் அந்தந்த குடும்பங்களில் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களால் குழந்தைகளின் அறிதல், மொழி மற்றும் உணர்வு வளர்ச்சி நிலைகள் பாதிக்கப்படுகின்றன.
உலகச் சுகாதார மையத்தின் திட்ட உதவி தலைமை இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, "கருத்தரிப்பு முதல் குழந்தைப் பிறப்பு அதன் பிறகு ஒருமாத காலம் ஆகிய காலக்கட்டத்தில் சேய், தாய் ஆகியோரின் ஆரோக்கியம் நன்றாகத் தொடங்க வேண்டும். ஆகவே பிறந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியம் என்பது மிக முக்கியம், இதனால் பல குழந்தைகளின் வாழ்க்கை பெரிதும் காப்பாற்றப் படுகிறது, இது குடும்பம், தலைமுறைகளின் பிரச்சினையாகும்" என்றார்.
2017-ல் சுமார் 25 லட்சம் குழந்தைகள் தடுக்க முடியக்கூடிய காரணங்களினால் பலியாகியுள்ளனர். இதில் மூன்றில் 2 பங்கு குழந்தைகள் 10 மாதம் ஆகாமலே முன் கூட்டியே பிறந்த குழந்தைகள். இந்தக் குழந்தைகள் உயிருடன் இருந்தலும் தீரா நோயுடனும் வளர்ச்சிக் குறைபாடுகளும் உள்ளவர்களாகவே இருப்பார்கள். சுமார் 10 லட்சம் குழந்தைகல் இவ்வகையில் செயலிழந்து கிடக்கின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.
81 நாடுகளில் சுமார் 29 லட்சம் குழந்தைகள் மரணத்தின் பிடியில் உள்ளன. இந்த அறிக்கயில் 24 மணி நேர சிகிச்சை, குடும்பங்களுக்கும், பயிற்சி பெற்ற நர்ஸ்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு, ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து நாடுகளும் நோயுடன் பிறக்கும் குழந்தைகள் அல்லது அளவில் மிகச்சிறியதாக பிறந்து வளர்ச்சிக்குறைபாடுகளுடைய குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க தரமான மருத்துவம் சுகாதாரக் கொள்கைகளை வகுத்தெடுக்க வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
குழந்தைகள் உரிமையை முன்னெட்டுத்து அனைத்து நாடுகளும் சட்ட ரீதியான, மருத்துவ ரீதியான, மனிதார்த்த, மற்றும் நிதி ஆதாரங்களை உருவாக்கி உயர்தரமான சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

.jpeg
)

கருத்துகள் இல்லை