நடுத்தெருவில் விடப்பட்ட மஹிந்த
நடுத்தெருவில் விடப்பட்ட மஹிந்த! ரணில் பக்கம் தாவும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்!
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து இலங்கை மீயுயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை அடுத்து மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. Mahinda Supporters Crossover UNP
இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகயுள்ள நிலையில் சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான அரசியல்வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் மீண்டும் ஐ.தே.க தலைமையில் தேசிய அரசு ஒன்று அமையும் சாத்தியம் உள்ளது.
அரசமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் தனி ஆட்சியில் , அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்க வேண்டும். எனினும் தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் 45 ஆக அதிகரித்து கொள்ள முடியும்.
இதன் பிரகாரம் கிடைத்துள்ள தகவல்களின் படி துமிந்த திசாநாயக்கா , மஹிந்த சமரவீர உட்பட்ட குழுவினர் இன்று ரணிலுக்கு தமது ஆதரவை வழங்குவர் என தெரியவருகின்றது.

.jpeg
)

கருத்துகள் இல்லை