கூட்டமைப்பு முன்வைத்த கோாிக்கைகள் என்ன?

பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.



ஆனால், கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை. பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற விடயங்களையே கூட்டமைப்பினர் கோரினர். பெரிய விடயமொன்றையும் அவர்கள் கேட்கவில்லை. ஜனநாயக உரிமையை பாதுகாக்குமாறு கோரினார். அவர்கள் முன்வைத்தது சாதாரண பிரச்சினை. அவற்றை தீர்ப்பதாக உறுதியளித்தோம். ஏனையவர்கள் கூறியமைபோன்று எந்தவிட உடன்பாடும் எட்டப்படவில்லை.

நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட ஜனாதிபதியும் உடன்பட்டுள்ளார். அதற்கமைய, அரசியலமைப்பின் பிராகரம் நாம் தேர்தலுக்கு செல்வோம். அரசியலமைப்பை எட்டி உதைத்து செயற்பட முயாது.

இனி அரசியல் தீர்மானங்களை சரிவர நிறைவேற்றி தேர்தலுக்கு செல்வோம். நாளை பிரதமராக ரணில் பதவியேற்பார். அதற்கடுத்து அமைச்சரவை பதவியேற்கும். தேர்தல் பிற்போடப்பட மாட்டாது. உடன் மகாண சபை தேர்தலுக்கு செல்வோம்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.