இலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம்

இலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர், ரோஹண லக்ஷ்மன் பியதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கை அரசியலின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டு மக்களினது கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுவதை காட்டிலும் சர்வதேச கருத்துக்களுக்கே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் தற்போதைய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு சக்திகளுக்கு ஏற்றவாறே தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனரென லக்ஷ்மன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மக்களின் தீர்ப்பை மாற்றுவதற்கு சட்டத்துக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.