ஹாக்கி உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹாக்கிஉலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குபலம்வாய்ந்த பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹாக்கிஉலக கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இங்கிலாந்து அணிக்கு எதிராகமோதியபெல்ஜியம், 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணியின் அலெக்ஸாண்டர் ஹென்றிக்ஸ்,ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். போட்டி முழுவதும், பெல்ஜியத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல், திணறிய இங்கிலாந்து அணி, தொடரை விட்டு வெளியேறியது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி, 2-2 என சமமாக முடிந்தது.அதன்பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தேர்ந்திருக்க முடிவெடுக்கப்பட்டது அதிலும் இரண்டு அணிகளும் 3-3 என சமனாகஇருந்தன. அதைத்தொடர்ந்து, அடுத்த பெனால்டி ஷாட் அடிக்கும் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், நெதர்லாந்து அணி கோல் அடிக்க, ஆஸ்திரேலியா தவறவிட்டது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நெதர்லாந்து நாக் அவுட் செய்தது.
நாளை நடைபெறும்இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜிம் அணிகளும் மோதுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.