வரலாற்று சாதனை படைக்கும் பி.வி.சிந்து!

சீனாவில், உலகின் 'டாப்-8' இடங்களில் உள்ள பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தை சேர்ந்த ரட்சனோக் இன்தனோனை எதிர்க்கொண்டார்.
இப்போட்டியில், ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய சிந்து முதல் செட்டில் 21-16 என எளிதாக வென்றார். தொடர்ந்து விளையாடியபோது இரண்டாவது செட்டில் சிந்துவுக்கும், ரட்சனோக்கும் இடையே ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. பின்னர், இரண்டாவது செட்டிலும் சிந்து 25-23 என தன்வசப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில், பிவி சிந்து, ரட்சனோக் இன்தனோனை 21-16, 25-23 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த உலகின் 5ஆம் நிலை வீராங்கனை நொஜோமிக்கு எதிராகக் களமிறங்குகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.