சட்டத்துறைத் அதிபதிகள் உயர் நீதித்துறைப் பதவிகளுக்குப் பெருவாரியாக இந் நாட்டில் நியமனம்!

கேள்வி: நீதித்துறை தற்போது சிறந்த தீர்ப்புக்களைத் தரத்தொடங்கியுள்ளன. எனவே உள்நாட்டு நீதிபதிகள் குழாம் யுத்தக் குற்ற விசாரணைகளை நடாத்தலாம் என்றும் வெளிநாட்டு உள்ளீடல்கள் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு நீதியரசராக இருந்த உங்களின் கருத்து என்ன?


பதில்;: தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா அவர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளார். ஆரம்ப நீதிமன்றங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தவர் அவர். பிரதம நீதியரசர் சன்சோனியின் பின்னர் தற்போதைய பிரதம நீதியரசரே முழுமையாக ஆரம்ப நீதிமன்றங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்த ஒரு பிரதம நீதியரசர் ஆவார்.

பிரதம நீதியரசர் பரிந்த இரணசிங்க அவர்கள் குறுக்கு வழியில் பிரதம நீதியரசராக வந்தவர். அதாவது ஆரம்ப நீதிமன்றங்களின் நீதிபதியாக இருந்து மேல் வந்திருந்தாலும் அவருக்கு நீதி அமைச்சின் செயலாளர் பதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர். அவர் உரியவாறு பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் அவரால் பிரதம நீதியரசராக வந்திருக்க முடியாது. காரணம் சட்டத்துறைத் தலைமை அதிபதியின் திணைக்களத்தில் (யுவவழசநெல புநநெசயட’ள னுநியசவஅநவெ)15 – 20 வருடங்கள் அரசாங்கத்தின் நலனுக்காக வழக்குகள் பேசிவந்த அரச சட்டத்தரணிகள், உதவி சொலிசிற்றர் ஜெனரல் அல்லது உதவி மன்றாடியார்கள், மேலதிக மன்றாடியார்கள், மன்றாடியார்கள், சட்டத்துறைத் தலைமை அதிபதிகள் ஆகியோரே உயர் நீதித்துறைப் பதவிகளுக்குப் பெருவாரியாக இந் நாட்டில் நியமிக்கப்படுகின்றார்கள்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #c.v.vigneswaran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.