வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாஸ தலைமையில் தினச்சந்தைக்கு முன்பாக ஒன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியினர் பட்டாசு கொளுத்தியும், பாற்சோறு கொடுத்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஏ.ஜெயத்திலக்க மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #unp #Vavuniya

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.