தேசிய மட்டத்தில் கொக்குவில் பொது நூலகத்துக்கு விருது

யாழ்ப்பாணம் கொக்குவில் பொது நூலகம் சிறந்த நூலக சேவைக்காக தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது என்று நூலகர் கி.அனிதா தெரிவித்துள்ளார்.


தேசிய ஆவணமாக்கல் சபை வருடாந்தம் நடத்தும் விருதுக்கான போட்டிகளில் சிறந்த நூலக சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக விருதுகளைப் பெற்று வரும் கொக்குவில் பொதுநூலகம், இந்த வருடம் நாடு முழுவதும் உள்ள சிங்களம் மற்றும் தமிழ் நூலகங்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

வாசிப்பு மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள், விரிவாக்கல் சேவைகள், நடமாடும் சேவை, சிறுவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகள் உள்ளிட்டவைகளில் சிறந்த சேவையை இந்த வருடம் வழங்கியுள்ளது என்று தேசிய ஆவணமாக்கல் சபை பாராட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் வைத்து அண்மையில் வழங்கப்பட்ட விருதை நூலகத்தின் நூலகர் கி.அனிதா பெற்றுக் கொண்டார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #Anitha #Kokuvil #Libary

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.