விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் !

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி
உள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. படத்தில் வேல ராமமூர்த்தி,
எம் எஸ் பாஸ்கர், வின்சென்ட் செல்வா, ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை
பிர்லா போஸ் என்ற நேர்மையான, தன் மனதில் பட்டத்தை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரம் பிரபு. மும்பை தாதாக்களை மீறல் செய்தவர் 33 என்கோவுண்டர், 5 ட்ரான்ஸபார் என்கிறது இவரின் பயோ டேட்டா. படம் ஆரம்பிக்கும் முன்னே அம்மா மற்றும் காதல் பிரிக்கின்றனர், சஸ்பண்டும் ஆகிறார்.
ஐந்து வருடம் கழித்து மீண்டும் ராமேஸ்வரத்தில் சார்ஜ் எடுக்க வருகிறது உத்தரவு. 15 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற பீஹாரி மயோசிஸ்ட் ஒருவனை சுட்ட தள்ள கிளம்புகிறார் ஹீரோ. அங்கு சென்று இவர் உண்மை நிலையை அறிகிறார். உண்மை குற்றவில்லை யார் யார், அந்த அப்பாவி வாலிபனை தப்பிக்க வைத்தாரா, ராமேஸ்வரம் விட்டு உயிருடன் திரும்பினாரா என்பதே மீதி கதை.


பிளஸ்
எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு, ஒளிப்பதிவு, கதையின் மையக்கரு
மைனஸ்
சலிப்பு தட்டும் திரைக்கதை, படத்தின் ஓடும் நேரம், ( உப்புக்கு இயக்குனரே படத்தில் ஹீரோயினாக ஹன்சிகா- பணம் தான் வீண்)
சினிமாபேட்டை அலசல்
சி சென்டர் ஆடியன்ஸுக்கு 96 போன்ற காதல், ராட்சசன் போன்ற திரில்லர் படத்தை புரிந்து பார்க்கும் சூழலுக்கு தமிழ் சினிமா வளர்ந்து விட்டது. ஆனால் இயக்குனர் சினிமா ரசிகனை முட்டாளாகவே சிந்தனை செய்து அவனுக்கு புரியும்படி படம் எடுக்கிறான் என்று சொதப்பிவிட்டார் என்றால் அது மிகையாகாது.
இப்படம் சமீப காலமாக நடந்து வரும் பாலியல் வன்கொடுமை, அதன் பின் உள்ள போலீஸ், வக்கீல், மீடியாவின் நோக்கம் என துகிலுரித்து காட்டுகிறது. சமுதாயத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பதையும் சொன்னதற்கு கூடுதல் க்ளாப்ஸ்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்
மசாலா படங்களாக நடித்த விக்ரம் பிரபு, கதையை மட்டும் நம்பி எடுத்த முதல் ஸ்டேப் இப்படம். வாழ்த்துக்கள் ப்ரோ. இது விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை என்பதை விட எம் எஸ் பாஸ்கரின் திருப்புமுனை என்று தலைப்பு வைப்பதே சரி.


ஒன்றரை மணிநேரம் இன்வெஸ்டிகேக்ஷன் திரில்லர் பாணியில் எடுத்திருந்தால் படம் பம்பர் ஹிட் அடித்திருக்கும்.
இறுதியில் கதையின் ஹீரோவான எம் எஸ் பாஸ்கர், வில்லனான வேல ராமமூர்த்தி நடந்துக்கொண்டு விதம் இன்றைய பெற்றோர்களுக்கு ஒரு நல்ல பாடம். அடுத்த முறையும் இது போன்ற நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு, சற்றே விறுவிறுப்பான படமாக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் கொடுக்க வேண்டும் என்பதே சினிமா பேட்டையின் ஆசை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.