குட்டி பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் லேடி சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஹீரோயின்களுக்கே ரோல்மாடலாக இருக்கக்கூடியவர்.
மேலும் தல அஜித்துடன் ஜோடி சேர்ந்து இவரது நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.


சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.
அங்கு நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்றை நயன்தாரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.