அரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமின் நிலை!

52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலைக்கு பின்னர் இடம்பெற்ற வெளிநாடு ஒன்றின் தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்ற பெருமையை ரவூப் ஹக்கீம் பெற்றுள்ளார்.



கடந்த ஒன்றரை மாத காலங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் தேசிய வைபவங்களில் (ஓமான், ஐக்கிய அரபு இராஜ்யம்) குறிப்பாக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தி வெளிவிவகார செயலரே கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கு மஹிந்த அரசாங்கத்தை எந்த நாடுகளும் அங்கிகரிக்காதமையே காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் நிறைவுக்கு வந்த அரசியல் நெருக்கடி நிலைக்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற வைபவத்தில் முதன் முறையாக அரசாங்க தரப்பில் இருந்து ஒருவர் கலந்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று மாலை நடைபெற்ற கட்டாரின் தேசிய தின கொண்டாட்டத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.