இலங்கைக்கு பெருமை சேர்த்த தர்சினி சிவலிங்கம்
வலைப்பந்தாட்ட போட்டிகளில் ஆசியா ரீதியில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்த வடமாகாணத்தைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கம் எழுந்தினி சேதுகாவலர்போன்று பலரை வடமாகாணத்திலிருந்து விளையாட்டுத்துறையில் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பது அவசியமானது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை 14.12.2018 நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்
வாழ்க்கையை சரியாக கொண்டு செல்வதற்கு மனதினையும் உடலினையும் சரிசமமாக வைத்திருப்பது அவசியம் சில மாணவர்கள் கல்வியில் கவனம் எடுக்கின்றார்கள். உடல் நலனை கவனத்தில் கொள்ளாது. அவ்வாறானவர்களுக்கு திறமை புலமை புத்தி இருந்தாலும் உடலில் வலிமை இல்லாது போனால் அவர்கள் வாழ்க்கை சரிவராது போகும். சிலரை பார்;த்தா அவர்கள் எந்தநேரமும் விளையாட்டில் கவனம் செலுத்திக்கொண்டு இருப்பார்கள் கல்வியில் கவனம் செலுத்துவது கிடையாது. இதுவும் வாழ்க்கைக்கு பிரச்சினை ஒரு நல்ல வாழ்க்கையை கொண்டு போவதற்கு இரண்டையும் சரிசமமாக பேண வேண்டும்.

இந்தப் பிரதேசத்திலிருந்து ஆசியாவிற்கு போய் தேசிய போட்டிகளில் பங்குபற்றும் வீர வீராங்கனைகள் இருக்கின்றார்கள் என்று நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டும். உங்களுக்கு தெரியும் கரப்பந்தாட்ட போட்டியில் ஆசிய ரீதியில் விளையாடி இலங்கைக்கு கௌரவத்தினை ஏற்படுத்திய வீராங்கனைகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். அவர்களை இந்த நிகழ்வில் பாராட்டுவதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நிகழ்வில் ஆர் குருபரன் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலன் தென்மராட்சி பிரதேச செயலர் தேவநந்தினி பாபு ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை