தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா
தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டுத் திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்செய்து புனிதமண் எடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ளது குதிரைமொழி கிராமம். இப்பகுதியில் உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அய்யனார், அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டிய நாளே ‘கள்ளர் வெட்டுத் திருவிழா’வாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கள்ளர் வெட்டுத் திருவிழா, கார்த்திகை மாதத்தின் முதல் நாளான கடந்த நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. கடந்த 30 நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. அத்துடன், காலை, மாலை வில்லிசையில் அய்யனாரின் கதைகள் பாடப்பட்டுவந்தது.
நேற்று காலை 108 பால்குட ஊர்வலம், வெள்ளிக்குடத்தில் தாமிரபரணி தீர்த்தம், முளைப்பாரி எடுத்துவருதல் நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு நிகழ்ச்சி, நேற்று மாலை நடைபெற்றது. மதியம் 4 மணிக்கு சாமி ஆடும் நபர்கள் கையில் பெரிய ஓலைப் பெட்டியை வைத்துக்கொண்டு வேகமாக ஓடி, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழம், வெற்றிலை, தின்பண்டங்கள், பலகாரங்கள், விளையாட்டு சாமான்கள், பூஜைப் பொருள்கள் எனக் கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போட்டனர். இப்படி கடைகளில் பொருள்களை எடுக்கும் நிகழ்ச்சியை ‘எடுப்பெடுத்தல்’ என்பார்கள். பின்னர், கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடக்கும் செம்மண் தேரிக்கு வந்தனர்.
அங்கு, குவிக்கப்பட்ட மணல் மேட்டில் வைக்கப்பட்ட செவ்விளநீரை அரிவாளால் வெட்டும் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கள்ளருக்குத் தண்ணீர் தெளித்து சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், இளநீர் வெட்டப்பட்ட இடத்தில் உள்ள செம்மண்ணை பக்தர்கள் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்கள் இந்த மண்ணை எடுத்தனர். விவசாய நிலத்தில் தூவினால் விவசாயம் செழிக்கும், பூஜை அறையில் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாண்டிய மன்னனிடம் சேவகம் பார்த்தவர்தான் கற்குவேல் அய்யனார்.அய்யனாரின் ஆளுகைப் பகுதிக்குள் நுழைந்து பொருள்களைத் திருடிச்சென்ற திருடனான கள்வரை, அய்யனாரின் படைத்தளபதியான வன்னியராஜா வெட்டும் நிகழ்ச்சிதான் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி என்கிறார்கள் பக்தர்கள்.
கள்ளருக்குப் பதிலாக செவ்விளநீரை கயிற்றில் கட்டி வெட்டுகிறார்கள். வெட்டப்பட்ட இளநீர் பட்ட மண்ணை பக்தர்கள் புனிதமண் என்கின்றனர்.

.jpeg
)

கருத்துகள் இல்லை