இணுவில் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானம்

மயானம் என்பது இறைவன் இருக்கும் ஆலயத்திற்க்கு ஒப்பானதாகும் அந்த
வகையில் நான் முதல் கூறியது போல காரைக்கால் இந்து மயானம் மிகவும்  புனிதம் மிக்கது இருந்தும் அங்கே புனிதம் பேணப்படவில்லை இதற்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகள் அல்ல நாம் தான் ஏனெனில் அங்கே அறிவித்தல் பலகை வைக்கப்பட்டும் அதற்கமைவாக யாரும் நடப்பதில்லை அறிவித்தல் பலகையில் உள்ள விடயங்களை பின்பற்றி நடக்க முற்படாத நிலையில் புனிதம் பேணுவதென்பது ஆகாத விடயம் குறிப்பாக இறந்த ஆத்மாக்களுக்கான தகனத்தின் பின்னரான படையல்களை வெளி வாயிலில் படைக்க வேண்டாம் அதற்கென உள்ள இடத்தில் படைக்குமாறு கூறியும் இன்றுவரை வெளி வாயிலில் தான் படைக்கப்படுகிறது. இறந்த உங்களின் பெற்றோர் உறவினர்களுக்கான படையல் அருவருப்பான இடத்திலா? சிந்தியுங்கள் குளிர்பானம் தண்ணீர் போத்தல்களை மயானத்தின் உள்ளே எடுத்து வருவோர் அவற்றை தேவை முடிந்தவுடன் வீசி எறிந்துள்ளனர்.அவை மயானம் எங்கும் காணப்படுகின்றது இக்குறைபாடுகள் தொடர்பாக
 பொதுமக்களால் வட்டார உறுப்பினர் என்ற ரீதியில் எனக்களித்த முறைப்பாடிற்கமைவாக  இன்று(17/12/2018) நேரில் சென்று பார்த்து அனைத்தும் குறிப்பெடுத்துள்ள நிலையில் விரைவில் இங்கே  காணப்படும் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை உரியவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்று மக்களின் வேண்டுகோளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பேன் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்

இப்படிக்கு
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்
திருமதி கௌசலா சிவா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.