காலம் செய்யும் கோலம்
நேற்றைய தினம் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி வீடு ஒன்றில் இருந்து, ஏழு இளைஞர்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இளைஞா்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தநிலையில் மக்களால் வழங்கப்பட்ட புகாரிற்கிணங்கவே பொலிசாா் அங்கு சென்றுள்ளனா். இந்த இளைஞா்கள் அனைவரும் உயா்தரம் கற்பவா்கள் எனவும் கஞ்சா, சிகரெட் போன்ற போதைப்பொருட்களைப் பாவித்து வந்துள்ளாா்கள் எனவும் தெரிவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண் 27 வயதுடையவா் எனவும் இவா் காத்தான்குடியைச் சோ்ந்தவா் எனவும் இந்த மாணவா்களின் பெற்றாா் ஒருவா் கல்விகற்பதற்காக அந்த வீட்டினை வாடகைக்கு எடுத்து மகனைத் தங்கவைத்துள்ள நிலையிலேயே குறித்த மாணவன், தனது நண்பா்களையும் அழைத்துவந்து மேற்படி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளாா் எனவும் கூறப்படுகின்றது.
பெருகிவரும் போதைப்பாவனையும் கலாசார சீா்கேடும் மக்களின் மனதில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை தொடருமாயின் எமது இளைய சந்ததியினா் கட்டுக்கோப்பற்ற தன்னிச்சையான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு சீரழிந்து சின்னாபின்னமாகும் அபாயம் ஏற்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
உடையவன் இல்லாட்டி எல்லாமே ஒரு முளம் கட்டைதான் போல.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை