மன்னார் மனித புதைகுழி அகழ்வு – காணாமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி நேரில் பார்வை!

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை காணாமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.40 மணியளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


இதன் போது குறித்த அகழ்வுப் பணி தொடர்பாகவும் எனைய விடயங்கள் குறித்தும் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்துகொண்டார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 118 ஆவது நாளாக  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுவருகின்றது.

தற்போது அகழ்வுப் பணிகள் மற்றும் அப்புறப்படுத்தல் பணிகள் இடம்பெற்றுவருவதோடு, புதைகுழியினை சற்று ஆழமாக தோண்டி அகழ்வு  பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை மன்னார் மனித புதைகுழியிலிருந்து 276 க்கு மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன, அவற்றில் 269 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில், பரிசோதனைக்காக அனுப்பப்பட தகுதியான மனித எலும்பு கூடுகள் தெரிவு செய்யும் பணியும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.