அதிக முதலீட்டில் ரயில் திட்டங்கள்!

ரூ.44,605 கோடி முதலீட்டில் துறைமுக ரயில் இணைப்புத் திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
துறைமுகங்களை ரயில் பாதையால் இணைக்கும் திட்டம் துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தாலும் மத்திய ரயில்வே அமைச்சகத்தாலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.18,253 கோடி மதிப்பிலான 32 திட்டங்கள் ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ரூ.175 கோடி மதிப்பிலான எட்டு திட்டங்கள் நிறைவுற்றுள்ளதாக மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவை தவிர, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.24,877 கோடி மதிப்பிலான 23 ரயில் இணைப்புத் திட்டங்கள் ரயில்வே அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றன. இதில் ரூ.2,491 கோடி மதிப்பிலான ஏழு திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 ரயில் இணைப்புத் திட்டங்கள் ரூ.4,193 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.44,605 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 18 திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கப்பல் துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.