இரவிலும் விழித்திருக்கும் படுவாங்கரை மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள எல்லைப்புறக் கிராம மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசங்களினால் இரவு வேளையிலும் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் படுவாங்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தலைதூக்கிய நிலையில் தற்போது இந்நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளாந்தம் இரவு வேளைகளில் காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும், கிராமங்களுக்குள் உட்புகுந்து பயிரினங்களை அழித்து வருவது மாத்திரமல்லாது வீடுகளையும், தாக்கி அழித்து வருகின்றமை வேதனைக்குரிய விடையமாகும்.

இதுவரையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 10 இற்கு மேற்பட்ட உயிர்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் காவு கொள்ளப்பட்டுள்ளன. பலர் காயமடைந்தும், அங்கவீனர்களாகவும், உள்ள போதிலும், நூற்றுக்காணக்கான வீடுகளும், உடமைகளும், பல பயன்தரும் பயிரினங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

பலமுறை துறைசார்ந்தவர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், இந்நிலைமை குறித்து தெளிவாக எடுத்துரைத்துள்ள போதிலும், இன்றுவரை இவற்றுகுரிய தீர்வு எட்டாக கனியாகவே அமைந்துள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் தினமும் காட்டு யானைகளினால் எதிர்கொண்டு வரும் நிலைமை குறித்து அப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சுற்றுவட்ட அதிகாரி ஏ.ஹலீமிடம் இன்று(செவ்வாய்கிழமை) தொடர்பு கொண்டு வினவினோம்,

“போரதீவுப்பற்றுப் பிரதேசத்தல் தளவாய் எனும் இடத்தில் பாரிய காடு அமையப் பெற்றுள்ளது. அதில் யானைகள் தங்குவதற்குரிய வசதிகள் காணப்படுகின்றது. இவற்றைவிட இப்பிரதேசத்தில் சுற்றிவர வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாகவும், யானைகள் உணவுக்காக இரவில் கிராமங்களுக்குள்ளும், வயல் வெளிகளுக்குள்ளும் ஊடுருவுகின்றன. பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன், 3 தடவைகள் இங்குள்ள யானைகளை துரத்திக் கொண்டு மின்சார வேலிக்கு அப்பால் விட்டு, விட்டு வந்துள்ளோம்.

மீண்டும், மீண்டும், யானைகள் மின்சார வேலிகளை உடைத்து விட்டு கிராமங்களுக்குள் உள் நுழைகின்றன்“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.