எம்மோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்
தேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டுமென வட.மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
சத்துணவு ஆலை திறப்பு விழாவும், போசனைக்கண்காட்சி நிகழ்வும் மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”போர் முடிவடைந்த பின்னர் 2015 ம் ஆண்டு தேசிய கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்தமையினால், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது. ஆனால் அந்த நம்பிக்கை கடந்த 26ஆம் திகதியுடன் இல்லாமல் போய்விட்டது.
உலகிலேயே அமைச்சரவை இல்லாத, அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இலங்கை வரலாற்றில் உருவாக்கிவிட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியாக விழுந்த பாரிய அடியாகவே ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் அபிவிருத்தி தேவையில்லை என கூறிவிட்டு, நாங்கள் இருக்கமுடியாது. எமது முன்னாள் முதலமைச்சர் அதனைதான் கூறுகின்றார். என்னை பொறுத்தவரை இரண்டுமே முக்கியம். இல்லாவிடில் இங்கு அரசியல் தீர்வு கிடைக்கும் முன்னர் அபிவிருத்தி இல்லாமல் மக்கள் தமது பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துவிடும் நிலை ஏற்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை