‘பேட்ட’யில் சசிகுமார் யார்?

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் மூன்றாவது கேரக்டர் போஸ்டர்
வெளியாகியுள்ளது.
வழக்கமான ரஜினி படங்களில் இருந்து பேட்ட வித்தியாசப்படுவது முன்னணி நடிகர்களைப் பெரிய அளவில் இணைத்துள்ளதில்தான். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் படத்தில் ரஜினிக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்குமா அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களுக்காக அல்லாமல் ரஜினி படத்தில் நடித்தால் போதும் என்பதற்காக முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்துள்ளார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கான பதில் படம் வெளியான பின்னரே தெரிய வரும்.
விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்து வந்தனர். படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டிய பின்னரே சசிகுமார் இணைந்தார். விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்திலும் நவாஸுதீன் சிங்கார் சிங் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக ஏற்கெனவே வெளியான போஸ்டர்கள் மூலம் அறிய முடிந்தது. தற்போது சசிகுமார் இந்தப் படத்தில் மாலிக் என்ற பாத்திரம் ஏற்று நடிப்பதாகப் படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
மாலிக் கதாபாத்திரத்தின் புகைப்படத்துடன் ஏற்கெனவே வெளியான போஸ்டர்களைப் போலப் பின்னணியில் ரஜினி நடந்துவரும் படமும் இடம்பெற்றுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் டீசரை யூடியூப் தளத்தில் பார்த்துள்ள நிலையில் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.