ஆவாவினா் கைது


ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாண சிரேஸ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று  அதிகாலை (18)   3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில்  இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆகியோருடன், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வான் ஒன்றில், 6 வாள்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே, வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு; விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின்னர் 11 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.