அதிமுகவா, திமுகவா? தடுமாறிய தங்கம், தடுத்த தினகரன்

"சிறைக்குள் சசிகலாவை பார்த்துவிட்டு வெளியே வந்த தினகரன் மீடியா முன்பு
பேசினார். அப்போது செந்தில்பாலாஜி பற்றியும், தங்க.தமிழ்ச்செல்வன் பற்றியும் கேள்வி வந்தது. 'யாரு ஒருத்தர் போனாலும் இந்த இயக்கம் அப்படியேதான் இருக்கும்...' என்று சொன்னார். அருகே இருந்த தங்க தமிழ்ச்செல்வன் முகம் அப்போதே மாறியதை பார்க்க முடிந்தது.
இரவு பெங்களூரு ஹோட்டலில் தங்க.தமிழ்ச்செல்வனுடன் பேசிய தினகரன், 'சின்னம்மாகிட்ட நான் நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். செந்தில்பாலாஜியை அவங்க வீட்ல ஒருத்தர் மாதிரிதான் சின்னம்மா பார்த்துகிட்டாங்க. அவரு போனதை சின்னம்மாவால தாங்கிக்கவே முடியல. அவருப் போனதுக்கு என்னவோ நான் தான் காரணம் என்பது போல கோபமா பேசுறாங்க. உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. அதை செஞ்சுடலாம். நீங்க எல்லோரும்தான் என்னோட பலம். உங்களை இழுக்க பல முயற்சி நடக்கும். ஆனால் அது உங்க எதிர்காலத்துக்கு நல்லது இல்ல...' என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு தங்க.தமிழ்ச்செல்வன், 'நான் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவே இல்ல. இங்கே நிகழ்காலமே சிக்கலா இருக்குங்க. நமக்கு இருக்கும் ஸ்ட்ரெங்த் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டு இருக்கு. இன்னும் 5 வருஷம் கூட நான் சமாளிப்பேன். ஆனால் என்னை நம்பி இருக்கிறவங்க என்ன ஆவாங்க? எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி செலவு மட்டுமே பண்ணிட்டு இருக்க முடியும்?
வருமானத்துக்கு வழியை பார்த்துதானே ஆகணும்..' என்று தங்க தமிழ்ச்செல்வன் சொல்ல... ' கொஞ்சம் பொறுத்துக்கோங்க... எல்லாமே மாறும்..' என்று சொல்லி இருக்கிறார் தினகரன். அதன் பிறகுதான் தினகரன் கிளம்பி இருக்கிறார்.
தங்க.தமிழ்ச்செல்வன் விஷயத்தில் இன்னும் தினகரனுக்கு நம்பிக்கை இல்லையாம். ' நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை தங்கம் ரெடியா வெச்சிருக்காரு. என்ன நடக்கும்னு தெரியலை. ஆனால், செந்தில்பாலாஜி போனது, தங்கம் பிரச்னை பண்றதுன்னு எல்லாத்துக்கும் பின்னாடி பிஜேபி ஆட்கள் யாரும் இருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. பிஜேபிக்கு நம்மை கொண்டு போய் அதிமுகவுடன் சேர்க்கணும். அதுக்காக இந்த பிரிக்கிற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களோன்னு நினைக்கிறேன். ஆனால் அதை செய்யுறது யாருன்னுதான் தெரியல.' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி இருக்கிறார் தினகரன்." என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை படித்து முடிப்பதற்குள், ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை இட்டது.
“ இதேநேரம் அதிமுக தரப்பில் அவருக்கு தூது விட்டதை போலவே திமுகவில் இருந்தும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு தூதுபடலம் தொடங்கிவிட்டது. செந்தில்பாலாஜி மூலமாகவே அந்த ஆபரேசனை ஆரம்பித்திருக்கிறார்கள். வாட்ஸ் அப் காலில் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனுடன் பேசி வருகிறாராம் செந்தில்பாலாஜி. தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதே உங்களுக்கும் கிடைக்கும் வாங்க என்று அழைத்திருக்கிறார். நீங்க விரும்பினா தலைவரை உங்களுடன் பேச வைக்கிறேன் என்றும் சொன்னாராம். 'கொஞ்சம் பொறுங்க...' என்று மட்டும் சொல்லி இருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.
ஆனால் தினகரனின் தொடர் சமாதான முயற்சிகள் காரணமாக என் (ஃபேஸ்புக்) மூலமாக ஒரு பதிவை இட்டிருக்கிறார் தங்க. தமிழ்செல்வன். அந்தப் பதிவில், ‘நாளிதழ், வார இதழ், காட்சி ஊடகம், இணையதளம் என நாள்தோறும் என்னை பற்றி எழும் அத்தனை புரளிகளுக்கும் இந்த பதிலே முற்று புள்ளி. கொண்ட கொள்கையில் மாற்றம் என்பதே இல்லை, துரோகம் வேரோடு அறுக்கப்படும் வரை கழக பொதுச்செயலாளர் தியாகதலைவி சின்னம்மா மற்றும் கழக துணை பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் டிடிவி.தினகரன் அவர்களின் வழியில் கோடிக் கணக்கான கழக தொண்டர்களோடு என் பயணம் தொடரும். வாருங்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலோடு நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தயாராகுவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தங்க தமிழ்செல்வன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.