புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் சட்டவிரோதமானதல்ல

புதிய எதிர்க்கட்சி தலைவருக்கான
நியமனம் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டவிரோதமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகியது.
இதன்போது, அரசியலமைப்பு, நிலையியல் கட்டளை எதிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து குறிப்பிடப்படவில்லை. பத்திரிகை அறிக்கையை தவிர வேறு எதிலும் பொதுஜன பெரமுன, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுமந்திரனின் இக்கருத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த நீக்கப்படவில்லை. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்த நியமனம் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டவிரோதமானதல்ல.
கூட்டமைப்பின் செயலாளர் கையொப்பமிட்டு நேற்று மஹிந்தவை பிரேரித்து கடிதம் வழங்கியதன் மூலம் எதிர்க்கட்சி தலைவரை சபாநாயகர் தெளிவாக அறிவித்துள்ளார்” எனத்  தெரிவித்தார்.
   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.