திருடுங்கள் இதயங்களை.
கன்னம் வைத்து கழுத்தறுக்கும்
எண்ணமெல்லாம் எமக்கில்லை.
சின்னத்தனமான எண்ணம் அகற்றும்.
சீர் பல ஏந்தும் குணத்தில் நனையும்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
ஆதரித்த கரங்களிலே நீவீரும்
அடங்கியிருக்கலாம் நாம் எண்ணும்
எண்ணக்கலசத்தைப் புரியாமல்
ஏதேதோ புலம்புகிறீர்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
அறிவைக் கொடுக்கும் வாயதிலே
தீ சுமந்து சுழல்கின்றீர்.
அன்பை கொடுக்கும் இயத்திலே
வன்மை எண்ணம் சுரக்கின்றீர்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
தோண்டிப் புதைத்த மகிழ்வில்
கெக்கலித்து மகிழ்கின்றீர்.
கொடுந்துயர வார்த்தைகளால்
கவிபாடி நகைக்கின்றீர்.
புதைத்தாலும் வித்துக்கள்
முகை வெடித்து மலருமப்பா.
என்னோ மனிதர்கள் நீவீர்!
பாடையிலும் ஏறாத
பட்டத்தால் பயனில்லை.
கண்ணீரும் செந்நீரும்
மனிதர்க்குப் பொது நிறமே.
அகங்கார மனங்களிலே
அகல் விளக்கை ஏற்றிடுவீர்.
என்னோ மனிதர்கள் நீவீர். !
காலங்கள் கடந்தாலும்
நெஞ்சுருகி விம்ம வைக்கும்
அன்பே நிலைத்திருக்கும்.
புரிந்திடுவீர்!
புத்தி தெளிந்திடுவீர். !
திருடுங்கள் இதயங்களை.
கன்னம் வைத்து திருடுங்கள்.
அன்பால் இதயங்களை
அணைத்திடத் திருடுங்கள்.
அதுவே அழகிலும் அழகு!
தெய்வீக அழகு!
வன்னிமகள் எஸ். கே. சஞ்சிகா
Latha Kanthaija
எண்ணமெல்லாம் எமக்கில்லை.
சின்னத்தனமான எண்ணம் அகற்றும்.
சீர் பல ஏந்தும் குணத்தில் நனையும்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
ஆதரித்த கரங்களிலே நீவீரும்
அடங்கியிருக்கலாம் நாம் எண்ணும்
எண்ணக்கலசத்தைப் புரியாமல்
ஏதேதோ புலம்புகிறீர்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
அறிவைக் கொடுக்கும் வாயதிலே
தீ சுமந்து சுழல்கின்றீர்.
அன்பை கொடுக்கும் இயத்திலே
வன்மை எண்ணம் சுரக்கின்றீர்.
என்னோ மனிதர்கள் நீவீர்!
தோண்டிப் புதைத்த மகிழ்வில்
கெக்கலித்து மகிழ்கின்றீர்.
கொடுந்துயர வார்த்தைகளால்
கவிபாடி நகைக்கின்றீர்.
புதைத்தாலும் வித்துக்கள்
முகை வெடித்து மலருமப்பா.
என்னோ மனிதர்கள் நீவீர்!
பாடையிலும் ஏறாத
பட்டத்தால் பயனில்லை.
கண்ணீரும் செந்நீரும்
மனிதர்க்குப் பொது நிறமே.
அகங்கார மனங்களிலே
அகல் விளக்கை ஏற்றிடுவீர்.
என்னோ மனிதர்கள் நீவீர். !
காலங்கள் கடந்தாலும்
நெஞ்சுருகி விம்ம வைக்கும்
அன்பே நிலைத்திருக்கும்.
புரிந்திடுவீர்!
புத்தி தெளிந்திடுவீர். !
திருடுங்கள் இதயங்களை.
கன்னம் வைத்து திருடுங்கள்.
அன்பால் இதயங்களை
அணைத்திடத் திருடுங்கள்.
அதுவே அழகிலும் அழகு!
தெய்வீக அழகு!
வன்னிமகள் எஸ். கே. சஞ்சிகா
Latha Kanthaija

.jpeg
)





கருத்துகள் இல்லை